இழப்பீட்டிற்கான அலுவலகம், நாடுமுழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் ஆலோசனைகளைப் பெற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது

Share Button

இழப்பீட்டுக்கான அலுவலகம், நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களுடனான ஆலோசனை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. அதன் அடிப்படையில் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நாட்டின் பல பாகங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களின் ஆலோசனையை பெறவுள்ளது. 9 ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலும், பிற்பகல் 1.30க்கு வேலை பிரதேச செயலகத்திலும், 10 ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு சாவகச்சேரி பிரதேச செயலகத்திலும், பிற்பகல் 1.30க்கு மருதங்கேணி பிரதேச செயலகத்திலும் இதற்கான அமர்வுகள் இடம்பெறவுள்ளன. அத்துடன் டிசம்பர் 17 ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும், மாத்தறை அக்மன பிரதேச செயலகத்தில் 20 ஆம் திகதி காலை 9 மணிக்கும், பிற்பகல் 1.30க்கு அக்குரஸ்ஸ பிரதேச செயலகத்திலும் அமர்வுகள் இடம்பெறவுள்ளன. இழப்பீட்டுக்கான அலுவலகமானது இன்னல்களுக்குள்ளான நபர்களையும், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களையும், ஆலோசனைகளில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இதேவேளை – பாதிக்கப்பட்டோர் தமது ஆலோசனைகளை தபால் அல்லது மின்னஞ்சல் மூலமாக எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்குமாறு அனுப்பி வைக்க முடியுமென இழப்பீட்டிற்கான அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.,

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11