ஜனாதிபதியின் இந்திய விஜயம் பல துறைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Share Button

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்திய விஜயம் பல துறைகளுக்கும் நாட்டுக்;கும், முக்கியமானதாகுமென இந்தியாவின் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் பேராசிரியர் ஷமில லியனகே குறிப்பிட்டுள்ளார். தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் கலாசாரம் போன்ற துறைகளில் இலங்கையுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ள இந்தியாவின் ஒத்துழைப்பு நாட்டுக்கு அவசியமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிராந்திய நாடுகள் என்ற வகையில் இந்தியாவுடனான கொடுக்கல் வாங்கல்கள் மிக முக்கியமானதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஐந்து வருடக் காலப்பகுதியில் தேவையற்ற சர்வதேச தலையீடுகளுக்கு இலங்கை உள்ளானதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சுபாரதி நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்ட பேராசிரியர் ஷமில லியனகே தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *