கொழும்பு புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் பொருட்களின் விலை குறைவடைந்துள்ளது

Share Button

கொழும்பு புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைவடைந்துள்ளது.

150 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்டுவந்த பெரிய வெங்காயத்தின் விலை இன்று 125 ரூபாவாக குறைவடைந்திருப்பதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதி வர்த்தக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஹேமக்க பெர்னாண்டோ எமது நிலையத்திற்குத் தெரிவித்தார்.

பண்டிகைக் காலத்திற்கு போதுமான அளவு பொருட்கள் தற்போது இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும் இதனால், பொருட்களின் விலையை குறைந்த விலையில் பேண முடியும் எனவும் ஹேமக்க பெர்னாண்டோ குறிப்பிட்டார்

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *