தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் ஆயிரத்து 500 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு தங்கம் கிடைத்துள்ளது
நேபாளத்தில் இடம்பெற்றுவரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தற்போதைய நிலையில், போட்டியை நடத்தும் நேபாளம் 16 பதக்கங்களை பெற்று முதலிடத்தில் உள்ளது.
அதன்படி, நேபாளம் 16 தங்கம், மூன்று வெள்ளி, ஒன்பது வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளது.
இந்தியா ஆறு தங்கம். 11 வெள்ளி, நான்கு வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளது.
இலங்கை நான்கு தங்கம், பத்து வெள்ளி, 15 வெண்கலப் பதக்கங்களை பெற்றுள்ளது.
இதேவேளை, இன்று இடம்பெற்ற ஆயிரத்து 500 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையை சேர்ந்த நிலானி ரட்நாயக்க தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.