பொதுமக்களின் பிரச்சினையைத் தீர்க்க பிரதமர் தொடர்புப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது

Share Button

பிரதமர் அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பு பிரிவு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

அலரிமாளிகைக்கு அருகிலுள்ள இந்த அலுவலகம் இலக்கம் 101, ஆர்.டீ.மெல் மாவத்தை கொள்ளுப்பிட்டி என்ற முகவரியில் அமைந்துள்ளது. எவருக்கும் தமது நெருக்கடிகள் பற்றிய முறையிடுவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது. உரிய முறைப்பாடுகள் அமைச்சுகளுக்கும் நிறுவனங்களுக்கும் அனுப்பப்படவுள்ளன. பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டதா என்பது பற்றியும் கண்டறியப்படவுள்ளது.

பிரச்சினைகள் தொடர்பில் சமர்ப்பிக்கப்படும் கோரிக்கை கடிதங்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்படும்.

அதன் பின்னர், மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து கண்காணிக்கப்படும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11