ரயில்வே திணைக்களத்தில் சேவையாளர் பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு 20 ஆயிரம் பணியாளர்கள் தேவைப்படுகின்ற போதிலும், தற்போது 13 ஆயிரம் பேர் மாத்திரமே உள்ளனர். இதன் காரணமாக சில நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக சில பணியாளர்களுக்கு மாதாந்தம் பெருந்தொகையான மேலதிக கொடுப்பனவு செய்யப்பட வேண்டியுள்ளது. இலங்கை ரயில்வே திணைக்களத்தின் மீளாய்வுக் கூட்டத்தின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.