இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா காலமானார்

Share Button

இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்சா காலமானார்.

சிங்கப்பூரின் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் தமது 57ஆவது வயதில் இன்று காலமானார்.

2010ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட அவர், உயிரிழக்கும் வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அட்டகலன்பன்ன பிரதேச சபையின் தவிசாளராக அரசியலில் பிரவேசித்த ரஞ்ஜித் சொய்சா, சப்ரகமுவ மாகாண சபையின் அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார்.

அன்னாரது பூதவுடல் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு, கொழும்பு ஜயரட்ன மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படும். நாளை மாலை பூதவுடல் ரக்வானவிற்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதிக் கிரியைகளை தொடர்ந்து நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *