அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்குக் கொண்டுவர சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது

Share Button

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி குற்றச்சாட்டு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் பிரதான சந்தேகநபரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்காக இலங்கை அரசாங்கத்தின் ஊடாக அனுப்பப்பட்ட கடிதங்கள் சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்குக் கிடைக்கப் பெற்றிருப்பதாக சட்டமா அதிபர் இன்று தெரிவித்தார்.

கொழும்பு மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று இடம்பெற்ற போதே சட்டமா அதிபர் இந்த விடயங்களை தெரிவித்தார். இதனை சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களம், இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்த வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *