மழை காரணமாக நீரேந்து நிலைகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது

Share Button

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நீரேந்து நிலைகளின் நீர்மட்டம் 90 சதவீதமான உயர்வடைந்திருப்பதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

இதன் காரணமாக தேசிய மின் கட்டமைப்புக்கு தற்போது 55 சதவீத மின்சார உற்பத்தி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காஸல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 93 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. சமனலவௌ முற்றாக நிறைந்துள்ளது. மவுசாகல நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 91 சதவீதமாகவும், கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 89 சதவீதமாகவும் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *