முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பணிக்குழு பிரதானி லஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 19ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது

Share Button

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பணிக்குழு பிரதானி ஐ.எச்.கே மஹநாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாஸ திஸாநாயக்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 19ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

மூவர் அடங்கிய கொழும்பு நிரந்தர விசேட மேல் நீதிமன்றம் இன்று இதனை அறிவித்தது.

கந்தளாய் சீனி தொழிற்சாலையின் கலப்பு உலோக மற்றும் கட்டடத்தை வழங்குவதற்கு இந்திய வர்த்தகரிடம் 54 மில்லியன் லஞ்சமாகக் கோரி, அதில் 20 மில்லியன் ரூபாவை லஞ்சமாக பெற்றதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது. பிரதிவாதிகளுக்கு எதிராக 24 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *