தமது தேர்தல் பிரகடனத்தில் இரண்டு அரசாங்கங்கள் என்ற விடயம் இலங்கைக்கு உரித்தானதல்ல என பிரித்தானிய கன்ஸர்வேட்டிவ் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது

Share Button

பிரித்தானிய கன்ஸர்வேட்டிவ் கட்சி தமது தேர்தல் பிரகடனத்தில் இரண்டு அரசாங்கங்கள் உருவாவதற்கு தமது ஆதரவு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டமையானது, இலங்கைக்கு பொருந்தாதென அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் போல் ஸ்வூலி தெரிவித்துள்ளார்.

இரண்டு அரசாங்கங்கள் அமைக்கப்படுவதானது, மத்திய தரைக்கடல் நாடுகளுக்கு மாத்திரமே பொருந்தும் எனவும் அவர் தமது ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலுக்காக கன்ஸர்வேட்டிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்த விடயம் தொடர்பாக இன்று டுவிட்டர் கருத்து தெரிவித்துள்ள கன்ஸர்வேட்டிவ் கட்சி பிரதி தலைவர், இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என கொன்சர்வேற்றிவ் விஞ்ஞாபனத்தில் முன்மொழியப்படவில்லை.

நல்லிணக்கம், ஸ்திரத்தன்மை மற்றும் நீதியை அடைவதற்கான சர்வதேச முயற்சிகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம். இரு மாநிலம் தொடர்பான கூற்று மத்திய கிழக்கு நாடுகளுடன் மட்டுமே பொருந்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *