மத்தள விமான நிலையத்தை விற்பனை செய்யும் எந்தத் திட்டமும் கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

Share Button

மத்தள விமான நிலையத்தை விற்பனை செய்யும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மத்தள விமான நிலையத்தின் முகாமைத்துவம் தொடர்பில் தாம் வெளியிட்டதாகக் கூறப்பட்டு, தற்போதைய காலங்களில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உடுகம்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். தோல்வி அடைந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இவ்வாறான பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து தமது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முனைவதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *