நாட்டிற்கு பொருத்தமற்ற உடன்படிக்கைகளுக்கு தற்போதைய அரசாங்கம் உடன்படப்போவதில்லை என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு

Share Button

தற்போதைய அரசாங்கம் நாட்டிற்கு பொருத்தமில்லாத நிபந்தனைகளுக்கு எந்தவொரு நாட்டுடனும் உடன்படாது என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். எம்.சீ.சீ.உடன்படிக்கை தொடர்பில் போலிப் பிரசாரம் பரவுவதாக அவர் குறிப்பிட்டார். குறித்த உடன்படிக்கை தொடர்பில் ஊடகம், பாராளுமன்றம் என்பவற்றில் வெளிப்படையாக கருத்துக்கள் முன்வைக்க முடியும் என அவர் கூறினார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, அரச நிறுவனங்கள் மற்றும் நியதிச் சபைகளுக்கான தலைவர்களை நியமிக்கும் நடவடிக்கை அடுத்த வாரம் ஆரம்பமாகும் என இணை அமைச்சரவைப் பேச்சாளர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்கள் மற்றும் நியதிச் சபைகளுக்கான தலைவர்கள் நிபுணர் குழுவொன்றின் மூலம் தெரிவு செய்யப்படுவதாக அவர் கூறினார். இது கடந்த காலங்களில் அமுலில் இருந்த கலாசாரத்திற்கு முற்றிலும் மாறுபட்டது என அமைச்சர் ரமேஷ் பத்திரன சுட்டிக்காட்டினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *