டெங்கு நோய் பரவுவதை தடுக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் யோசனை

Share Button

நாடு பூராகவும் பரவும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு தமது சங்கம் எழுத்து மூலமான யோசனை முன்வைத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார். நோயைக் கட்டுப்படுத்த சர்வதேசத்தின் அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளல், நோய்த்; தடுப்புப் பிரிவுகளை வலுப்படுத்தி அதனுடன் தொடர்புடைய சகல தரப்புக்களினதும் பங்களிப்புடன் தேசிய குழுவொன்றை அமைப்பது தொடர்பிலான யோசனைகளும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த வேலைத்திட்டத்தை அமுற்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பையும் வழிநடத்தலையும் சுகாதார அமைச்சு வழங்க வேண்டும் என சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித்த அலுத்கே குறிப்பிட்டுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *