கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் நியமனம்

Share Button

கிழக்கு மாகாணத்தில் அனைத்து சமயங்களுக்கும் சம அந்தஸ்த்தை வழங்கி, சமய தலங்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்புவதற்கு அணைவரும் கைகோர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். வறுமையை ஒழிப்பதற்காக தாம் பசுமை புரட்சி வேலைத்திட்டத்தின் மூலம் வீட்டுத் தோட்டங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் அவர் தமது கடமைகளை இன்று ஆரம்பித்தார். இதன்போதே ஆளுனர் அனுராதா யஹம்பத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *