சுவிஷ் தூதரக அதிகாரிக்கு எதிரான வெளிநாட்டு தடை 17ஆம் திகதி வரை நீடிப்பு

Share Button

கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கும் சுவிஷ் தூதரக அதிகாரியான கானியா பரிஸ்டர் பிரன்சிஸ் என்னும் பெண்ணுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுத் தடை எதிர்வரும் 17ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் குறித்த விவகாரம் தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சந்தேக நபரின் உளவியல் நிலையை பரிசோதனை செய்வதற்கு விசேட மனநல வைத்தியர்கள் குழுவின் முன்னிலையில் ஆஜர்படுத்த வேண்டும் என சட்ட வைத்திய அதிகாரி தீர்மானித்துள்ளதாக ரகசியப் பொலிசார் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளனர். இதற்கான உத்தரவை நீதவான் பிறப்பித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *