தனது ஆட்சிக்காலத்தில் ஊடக சுதந்திரத்திற்கு எந்தவொரு அழுத்தமும் ஏற்படாது என ஜனாதிபதி உறுதி

Share Button

தனது ஆட்சிக்காலத்தில் நாட்டில் ஊடக சுதந்திரத்திற்கு எந்த வகையிலும் அழுத்தம் ஏற்படாது என உறுதியளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சாதாரண விமர்சனங்களுக்கு இடமுள்ளது. நாட்டிற்கும் நாட்டின் நற்பெயருக்கும் நேயம் மிக்க ஊடக கட்டமைப்பை முன்னெடுப்பதற்கு சகல ஊடகங்களும் முன்வரும் என தான் நம்புவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பு இன்று நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

அரசியல் வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் வினைத்திறனை உயர்த்துவது, ஊழல் மோசடிகளை ஒழிப்பது, பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவது போன்ற நோக்கங்களுக்காக மக்கள் தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்ததாக அவர் கூறினார். அந்த நோக்கம் நிறைவேறுவதற்கு ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்கும் என தான் நம்புவதாக அவர் கூறினார். சர்வதேச ரீதியிலான முதலீடு மற்றும் பொருளாதார உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கு நாட்டின் நற்பெயர் முக்கியத்துவம் வகிப்பதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு பாரிய பொறுப்புள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *