ஈரானுடன் வர்த்தக தொடர்புகளை பேணும் நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை.

Share Button

ஈரானுடன் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் தரப்புக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஈரானுடன் வர்த்தக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் எவரும் அமெரிக்காவுடன் வர்த்தகத் தொடர்புகளை வைத்துக் கொள்ளக் கூடாதென அவர் தனது ட்விட்டர் வலையத்தளத்தில் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராக மீண்டும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இவரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது. மீண்டும் விதிக்கப்பட்டுள்ள சில தடைகள் நேற்றிரவு அமுலுக்கு வந்துள்ளது. எரிபொருள் ஏற்றுமதியுடன் சம்பந்தப்பட்ட கடுமையான தடைகள் நவம்பர் மாதம் அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைகளானது, ஈரான் மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள உளவியல் ரீதியான யுத்தமாகும் என்று ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *