மஹிந்தானந்த அளுத்கமவேயின் வெளிநாட்டுப் பயணத்திற்கான தடை நீக்கப்பட்டுள்ளது

Share Button

இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமவேயிற்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு மூவர் அடங்கிய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது. மருத்துவ பரிசோதனைகளுக்காக இராஜாங்க அமைச்சர் சிங்கப்பூர் செல்வதற்காக அவர் சார்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில்; சதொச நிறுவனத்தின் ஊடாக விளையாட்டுப் பொருட்களை கொள்வனவு செய்து அரசியல் நடவடிக்கைகளுக்காக பகிர்ந்தளித்தமை ஊடாக அரசாங்கத்திற்கு சமார் ஐந்து கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தினார் என இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இவருக்கு எதிராக வழக்குச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-05 | 17:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931
புதிய நோயாளிகள் - 03
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48
நோயிலிருந்து தேறியோர் - 858
இறப்புக்கள் - 11