சுவிற்சர்லாந்து தூதரக பணியாளர் கானியா பெனிஸ்டர் விளக்கமறியலில்

Share Button

சுவிற்சர்லாந்து தூதரகத்தின் கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் என்ற பெண்ணை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்தப் பெண் இன்று பிற்பகல் சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் இவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். நாட்டை நெருக்கடிக்கு உள்ளாக்கியமைக்காக இவருக்கு பிணை வழங்க வேண்டாமென சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டது. இதன்படி கொழும்பு மஜிஸ்திரேட் நீதவான் செல்வி லங்கா ஜயரத்ன, இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *