வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்தும் நிவாரணம்.

Share Button

புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவர இலங்கை கடற்படையினர் தோள் கொடுத்து வருகின்றனர். வெள்ளம் காரணமாக, அசுத்தமடைந்துள்ள குடிநீர் கிணறுகளை துப்பரவு செய்து வரும் அதேவேளை, குடிநீரையும் விநியோகித்து வருகின்றனர். இதுவரை அசுத்தமடைந்திருந்த 32 கிணறுகள் துப்பரவு செய்யப்பட்டுள்ளன. 9 ஆயிரம் லீற்றருக்கு மேற்பட்ட குடிநீர் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க ஹூனுபிட்டிய கங்காராம விஹாரையும் பங்களிப்பை வழங்கியுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய முப்படையினர் சேதமடைந்த வீடுகளை புனரமைத்து வருகின்றனர். 0112 435 169 அல்லது

0112 327 084 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்வதன் மூலம் விஹாரையுடன் இணைந்து வீட்டை அமைக்க பங்களிப்பு வழங்கலாம்.

இந்நாட்களில் டெங்கு நோய் பரவும் ஆபத்து காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கூடுதலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் 792 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் பிரதேச மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 12:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 122
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 104
புதிய நோயாளிகள் - 0
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2