முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரட்னவை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவிப்பு.

Share Button

முன்ளாள் அமைச்சர் ராஜித்த சேனாரட்னவை கைது செய்வதற்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து, 24 மணித்தியாலங்களை கடந்துள்ளது. இதுவரை அவரை கைது செய்ய முடியவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. சட்டமா அதிபர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கிய பணிப்புரையின்படி, கொழும்பு மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றின் கோரிக்கைக்கு அமைய, முன்னாள் அமைச்சரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

வெள்ளை வேன் சம்பவம் தொடர்பான ஊடக சந்திப்பை நடத்தியமை தொடர்பில் இரண்டு பேர் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் ராஜித்த சேனாரட்னவை கைது செய்வதற்காக கொழும்பில் உள்ள அவரது இல்லத்திற்கும், களுத்துறை இல்லத்திற்கும் சென்றுள்ளனர். எனினும், முன்னாள் அமைச்சர் எந்தவொரு இடத்திலும் இருக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சரியான நேரத்தில் டொக்டர் ராஜித்த சேனாரட்ன சட்டத்தின் முன் ஆஜராகுவார் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-05 | 17:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931
புதிய நோயாளிகள் - 03
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48
நோயிலிருந்து தேறியோர் - 858
இறப்புக்கள் - 11