புதிய அரசாங்கம் பதவிககு வந்த பின்னர், முன்னெடுக்கப்படும் முதலாவது வெளிநாட்டு முதலீட்டுத் திட்டத்தின் கீழ், கொழும்பு நகரத்தில் 30 மாடிகளைக் கொண்ட வணிகக் கோபுரம்

Share Button

புதிய அரசாங்கம் நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற பின்னர், நடைமுறைப்படுத்தப்பட உள்ள முதலாவது வெளிநாட்டு முதலீட்டுத் திட்டத்தை, பெரனியல் றியல் எஸ்டேட் ஹோல்டிங் நிறுவனம் முன்னெடுக்கவுள்ளது. கொழும்பு சாரணர் மாவத்தையில் பேரே-வாவி மற்றும் ஷங்ரில்-லா ஹோட்டலுக்கு அருகாமையில் அமைந்துள்ள 3 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த முதலீட்டுத் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்படும். இதன் கீழ், 30 மாடியைக் கொண்ட வணகக் கோபுரமொன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 700 வீடுகளைக் கொண்டதாகவும் இது அமைக்கப்பட உள்ளது. இதற்கு மேலதிகமாக சில்லறை மற்றும் உணவு வர்த்தகத்திற்காக கட்டிடத் தொகுதியும் இதில் இடம்பெறவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி பொருளாதார அலுவல்கள் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் ரீதியில் இந்த நிறுவனத்திற்கு முதலீட்டுக்கான வசதிகளை மேற்கொள்வது தொடர்பில் சமர்ப்பித்த அமைச்சரவை ஆவணத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த முதலீட்டுக்கான உடன்படிக்கை கைசசாத்திடப்படுவதை அடுத்து திட்டத்திற்கான காணி குத்தகை அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. குத்தகைப் பணமாக 43 மில்லியன் ரூபா இலங்கை அரசாங்கத்திற்குக் கிடைப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11