மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிரான எந்தவொரு சக்திக்கும் நாட்டில் இடம்தரப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

Share Button

மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிரான எந்தவொரு சக்திக்கும் நாட்டில் இடம்தரப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதுவருடத்தை முன்னிட்டு, அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார். பொருளாதாரம், அரசியல், சமூக, கலாசார மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் புதிய யுகம் எமது நாட்டில் மலர வேண்டுமென சகல இலங்கையர்களும் எதிர்பார்க்கின்ற ஒரு தருணத்திலேயே புத்தாண்டு உதயமாகியுள்ளது. அந்த வகையில், மலர்ந்துள்ள இந்தப் புத்தாண்டை, புதிய அரசாங்கம், சுபீட்சத்தின் ஆண்டாக மாற்றுவதற்கு திடசங்கற்பம் பூண்டிருப்பதாகவும் ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டைக் கட்டியெழுப்பும் யுகமாக புத்தாண்டு அமைய வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். பிறக்கும் புத்தாண்டை இலங்கையின் தசாப்தமாக மாற்றியமைப்போம் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11