பாராளுமன்றத்தில் கூட்டு எதிர்க் கட்சி என்ற பெயரிலான கட்டியொன்று கிடையாதென அமைச்சர் ராஜித தெரிவிப்பு.

Share Button

பாராளுமன்றத்தில் கூட்டு எதிர்க்கட்சி என்ற பெயரிலான கட்சியொன்று கிடையாதென அமைச்சர் டொக்டர் ;ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரோ, குழுவோ எதிர்த்தரப்பில் அமர்ந்திருந்த ஒNரு காரணத்தால் எதிர்க்கட்சி பதவி கிடைக்கமாட்டாதென அமைச்சர் குறிப்பிட்டார். அவர் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டார்.

அரசாங்கம் அறிமுகப்படுத்திய சுரக்ஷா என்ற மாணவர் காப்புறுத்திட்டம் பற்றியும் அமைச்சர் ராஜித சேனாரத்ன விளக்கம் அளித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் பத்து இலட்சம் பிள்ளைகள் காப்பீடு செய்யப்படுகிறார்கள். இவர்களில் ஒருவரேனும் விபத்தில் சிக்கி தனியார் மருத்துவமனையிலேனும் அனுமதிக்கப்படும் பட்சத்தில் சிகிச்சைகளுக்காக பத்தாயிரம் ரூபா வழங்கப்படும். இலங்கை வரலாற்றில் இத்தகைய பாரிய காப்புறுதித் திட்டம் அமுலாவது இதுவே முதற் தடவையென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *