இலங்கை பாராளுமன்றம் உலகின் முன்மாதிரியான பாராளுமன்றமாக திகழ்வதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Share Button

இலங்கை பாராளுமன்றம் உலகில் உள்ள முன்மாதிரியான பாராளுமன்றமாக மாறியுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் உள்ள 170 பாராளுமன்றங்களில் இலங்கையின் பாராளுமன்றம் உயர் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்;. பாராளுமன்ற ஊழியர்கள் புதுவருடத்தில் தமது கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. இதன்போதே சபாநாயகர் இதனைக் கூறினார். 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சபாநாயகராக நியமனம் பெறும்போது இதற்கான இலக்குடன் பதவியை பொறுப்பேற்றதாக சபாநாயகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சகோதரத்துவம் மற்றும் கூட்டிப்பொறுப்பு கட்டியெழுப்பப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

நாட்டின் அபிமானத்திற்காக பாராளுமன்றம் மகத்தான பணிகளை முன்னெடுப்பதாக இந்த நிகழ்வின்போது பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் பாராளுமன்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்ய முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 12:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 122
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 104
புதிய நோயாளிகள் - 0
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2