தமிழக மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் இறுதி ஊர்வலம் செல்லும் கலைஞர் கருணாநிதி.

Share Button

முதுபெரும் அரசியல்வாதியும், முத்தமிழ் அறிஞருமான கலைஞர் கருணாநிதி இன்று நிரந்தரமாக பிரியாவிடை பெற்றுச் செல்கிறார்.

அன்னாரது பூதவுடல் இன்று மெரீனா கடற்கரையில் அறிஞர் அண்ணாவின் சமாதிக்;கு அருகில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

கலைஞர் கருணாநிதியின் பூதவுடல் தாங்கிய தங்கப் பேழை, சென்னை ராஜாஜி மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக மெரீனா கடற்கரை நோக்கி ஊர்வலமாக எழுத்துச் செல்லப்பட்டபோது, இருமருங்கிலும் திரண்டிருந்த ஆதரவாளர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்களும், கமலஹாசன், ரஜினிகாந்த் முதலான திரையுலகப் பிரமுகர்களும் அமரர் கருணாநிதியின் பூதவுடலுக்கு அஞ்சலி செலத்தினார்கள். அவருக்கு இறுதி மரியாதை செலுத்தச் சென்ற ஆதரவாளர்கள் இரண்டு பேர் சனநெரிசலில் சிக்கி உயிரிழந்ததாகவும்; அறிவிக்கப்படுகிறது.

கலைஞர் கருணாநிதியின் மறைவு குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அனுதாபம் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் இன்று விடுத்த அனுதாபச் செய்தியில், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் கருணாநிதி மிகுந்த ஈடுபாடு காட்டியதாகத் தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11