புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரமாணத்திற்கு அமைய, மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கப்படுமென்று பிரதமர் தெரிவிப்பு

Share Button

புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரமாணத்திற்கு அமைய, மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கப்படுமென்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிங்கள பௌத்த மத விடயங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். கடந்த தேர்தல் காலத்தில் பௌத்தர்களை இழிவுபடுத்தும் செயற்பாடுகளில் சில எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் செயற்பட்டனர். இருந்த போதிலும், புதிய ஜனாதிபதியின் கீழ், அமைக்கப்பட்டுள்ள இந்த அரசாங்கத்தின் மூலம் சிங்கள பௌத்த மக்களுக்கு உரிய உரிமைகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார். ஹம்பாந்தோட்டை வீரகெற்றிய பிரதேசத்தில் அமைந்துள்ள கசாகல விஹாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். ஞாயிறு பாடசாலை, மாணவர்கள் ஆயிரம் பேருக்கு பாடசாலை உபகரணத் தொகுதிகள் இந்தச் சந்தர்ப்பத்தில் வழங்கி வைக்கப்பட்டன. பிரதமர் அங்கு மேலும் உரையாற்றுகையில், மாணவர்கள் எதிர்காலத் தலைவர்கள் என்பதனால், அவர்களுக்கான சிறந்த கல்வியைப் பெற்றுக் கொடுப்பது சமகால அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்று குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *