பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் தொடர்பில் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்

Share Button

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் தொலைபேசி கலந்துரையாடல்கள் பற்றி விசாரிப்பதற்கான ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

குற்றமிழைத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். ஐக்கிய தேசியக் கட்சி ரஞ்ஜன் ராமநாயக்க பற்றிய தீர்மானத்தை எடுக்க வேண்டும் என அவர் கூறினார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் உரையாற்றினார். மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு செயற்படுவதன் மூலம் நீதிமன்றத்தின் மீதான நல்லெண்ணத்திற்கு களங்கம் ஏற்பட முடியும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, ஒருவரது அந்தரங்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தொலைபேசி கலந்துரையாடல்களை பதிவு செய்வது தவறானதாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமச்சந்திர தெரிவித்தார். ரஞ்ஜன் ராமநாயக்கவின் குரல் எனக் கூறப்படும் குரல் பதிவு தொடர்பாக அரச பகுப்பாய்வு விசாரணைகளை மேற்கொள்வது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், தபால் திணைக்களத்தை வினைத்திறன்மிக்கதாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். முன்மாதிரியான தபால் நிலையங்கள் பல விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11