ட்ரோன் கருவியை பயன்படுத்தி அதிக மீன்களை பிடிப்பதற்கான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்படுகிறது

Share Button

ட்ரோன் கருவியை பயன்படுத்தி, மீன்வளத்தை அறிந்து, அதிகளவிலான மீன்களை பிடிப்பதற்கான நவீன தொழில்நுட்பத்தை இலங்கை மீனவர்களுக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக வெளிநாடுகளின் மூன்று பிரதான நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா தெரிவித்தார்.

15 மாவட்டங்களில் மீன்பிடி தொழில்துறையில் ஈடுபட்டுள்ள மீனவர்களின் குடும்பங்களை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் ஆற்றலை மேம்படுத்தும் வகையிலும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சுபாரதி நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11