உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது

Share Button

உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது. ஈரான் பிரச்சினைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை குறைவடைந்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரான் பிரச்சினைகளுக்கு முன்னர் ஆயிரத்து 600 டொலர்களாக இருந்த ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது ஆயிரத்து 562 டொலர்களாக குறைவடைந்துள்ளது.

ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான முறுகல் நிலையும், சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக போரும் தங்கத்தின் விலை குறைவடைவதற்கான காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *