சர்வதேச தடைக்குப் பின்னர் தென்னாபிரிக்காவுக்கு எதிரான

Share Button

ரி-ருவென்டி போட்டியில் களமிறங்கும் தினேஷ் சந்திமால்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தடையை பூர்த்தி செய்த இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் மீண்டும் ஆடுகளம் திரும்புகிறார்.

எதிர்வரும் செவ்வாய்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள தென்னாபிரிக்காவுக்கு எதிரான டி-ருவென்டி போட்டியில் சந்திமால் விளையாடக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டிக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் அடங்கிய குழாமில் அவரது பெயரும் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் மைதானத்தில் இறங்க மறுத்ததன் மூலம் கிரிக்கெட்டின் உயிரோட்டத்தை சீர்குலைந்ததாக கூறி, சர்வதேச கிரிக்கெட் பேரவை பயிற்றுவி;ப்பாளர் சந்தி;க்க ஹத்துருசிங்க, முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருடன் சந்திமாலுக்கும் தடை விதித்தது. பந்தை சேதப்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து மூவரும் அணியை களமிறக்க மறுத்தார்கள்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 16:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 129
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 111
புதிய நோயாளிகள் - 7
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2