ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு

Share Button

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது என்று ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். இந்த வரிச் சலுகை 2023ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு வழங்கப்படும் என்று அவர் குறிப்பி;ட்டார். ஐரோப்பிய சங்க பிரதிநிதிகளுக்கும் அமைச்சருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை ஒன்றின் போது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதுவிடயம் தொடர்பில் ஐரோப்பிய சங்கத்தின் தீர்மானத்தை சங்கத்தின் இலங்கை – மாலைதீவுக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதித் தலைவர் மற்றும் அரசியல் வர்த்தக மற்றும் தொடர்பாடல் பிரதம பொறுப்பாளருமான தோர்ஸ்டன் பாக்பாடே தெரிவித்தார். இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ஜிஎஸ்பி வரிச்சலுகை மேலும் மூன்று வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *