சீனாவில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில், விசாரிப்பதற்காக பல தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு

Share Button

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, இலங்கை மாணவர்கள் 32 பேரையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் அழைத்து வருவதற்காக சீனாவின் வுஹான் நகர விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான ஒரு விமானத்தை தரையிறக்க பெய்ஜிங்கிலுள்ள இலங்கைத் தூதரகம் சீன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்தப் பிரதேசத்திலுள்ள மக்களை அவர்கள் இருக்கும் இடங்களிலிருந்து வெளியேற அனுமதியளித்ததும் இந்த விமானத்தைத் தரையிறக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. சீனாவின் பல்வேறு நகரங்களில் இலங்கையைச் சேர்ந்த 860 மாணவ மாணவிகள் வசிப்பதாக இனங்காணப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்காக கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை இலங்கை மாணவர்களுக்கு வழங்க இலங்கை தூதரகமும் குவாங்ஷு மற்றும் ஷங்ஹாய் நகரங்களிலுள்ள இலங்கை கொன்சியுலர் தூதரகங்களும் தயார் நிலையில் உள்ளன. குறிப்பிட்ட வைரஸ் இதுவரை எந்தவொரு இலங்கையருக்கும் தொற்றவில்லையென இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து இலங்கைக்கு வர எதிர்பார்க்கும் அனைத்து பிரஜைகளும் 0094-777-771-979 என்ற தொலைபேசி இலக்கம் வாயிலாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அழைப்பு மையத்தை தொடர்பு கொண்டு விமான ரிக்கெட் கட்டணத்தில் 50 சதவீத கழிவைப் பெற்றுக்கொள்ள முடியும். அதேபோல் இந்த மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் உதவுவதற்காக இலங்கை தூதரகம் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றது. 0086-10-65-32-18-61 அல்லது 62 என்ற தொலைபேசி இலக்கங்கள் வாயிலாகவும் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இது தவிர ஷங்ஹாய் கொன்சியுலர் தூதரகத்தின் 0086-134-727-717-02 அல்லது 0086-159-00-946-639 என்ற தொலைபேசி இலக்கங்களையும் தொடர்பு கொள்ள முடியும். குவாங்ஷு கொன்சியுலர் தூதரகத்தின் 0086-188-14-13-46-70 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 16:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 129
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 111
புதிய நோயாளிகள் - 7
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2