சீனாவிலிருந்து வருகைதருவோர் பற்றி அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.

Share Button

சீனாவின் வூஹான் நகரில் உள்ள 30 இலங்கை மாணவர்கள் பற்றி பேஜிங் நகரில் உள்ள இலங்கை தூதரகமும், அங்குள்ள இலங்கை அதிகாரிகளும் தொடர்ந்து கண்காணித்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நகருக்குள் நுழையவோ, அங்கிருந்து வெளியேறவோ எவருக்கும் அனுமதி வழங்கப்படாமையினால், இந்த 30 மாணவர்களையும் தாய்நாட்டுக்கு அழைத்துவர முடியாத நிலை காணப்படுகிறது. சீனாவின் வூஹான் மாநிலத்திலிருந்து வரும் சகல இலங்கை மாணவர்களும் தியதலாவ இராணுவ முகாமில் இரண்டு வாரங்களுக்கு கண்காணிப்பின் கீழ் வைக்கப்படவுள்ளார்கள். சீனாவிலிருந்து வருகைதரும் ஏனைய இலங்கையர்கள் தொடர்பான தகவல்கள் விமான நிலையத்தில் பெற்றுக் கொள்ளப்படவிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து, அவர்களின் உடல்நிலை பற்றி பிரதேச சுகாதார பரிசோதகர்கள் மூலம் அடிக்கடி பரிசோதிக்கப்படவிருக்கின்றது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சீனப் பெண் தங்கியிருந்ததாகக் கூறப்படும் காலி ஹொட்டல் உட்பட ஏனைய பிரதேசங்களில் பரிசோதனைகளை மேற்கொள்ள தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சந்திம சிறிதுங்க தெரிவித்துள்ளார். காலி கராபிட்டிய, அஹூங்கல்ல ஆகிய வைத்தியசாலைகள் இதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் கால்நடைகள் மூலம் இந்த நோய் பரவுவதற்கான வாய்ப்புக்கள் கிடையாதென கால்நடைகள் மற்றும் சுகாதாரத் திணைக்களம் அறிவித்திருக்கிறது. இந்த வைரஸ் தொற்று மிருகங்களிலிருந்து மனிதனுக்கு தொற்றினாலும், இது மனிதனின் மூலமே ஏனைய மனிதர்களுக்கு தொற்றுவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, வர்த்தக நிலையங்களிலும், மருந்தகங்களிலும் மாஸ்க் எனப்படும் முகமூடிகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள். சில இடங்களில் பாரிய அளவிலான தொகைக்கு இவை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இதேவேளை, சீனாவிலிருந்து இலங்கை திரும்பும் சீனர்கள் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா வலியுறுத்தினார்.

இன்று முற்பகல் 6 மணியுடன் முடிவடைந்த 12 மணித்தியாலங்களில் சீனாவிலிருந்து ஏழு விமானங்கள் இலங்கை வந்துள்ளதாகவும், அதில் எவருக்கும் இந்த நோய் தொற்றியிருக்கவில்லை என்றும் வலியுறுத்தப்பட்டது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11