ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுத் தளத்திற்கு அருகே அடுத்தடுத்து ஏவுகணைத் தாக்குதல்

Share Button

ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுத் தளத்திற்கு அருகே அடுத்தடுத்து ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஈராக் தலைநகர் பக்தாத்தின் வடபகுதியில் அமைந்துள்ள மொஷுல் நகரில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்திற்கு அருகிலேயே ஏவுகணைகள் வீழ்ந்துள்ளன. இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வெளியாகவில்லை. ஈரான் படைத் தளபதி ஹாசிம் சுலைமானிஅமெரிக்கப் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்துஈராக்கிலுள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *