பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் எந்த பயங்கரவாத இயக்கத்திற்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

Share Button

பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் எந்தவொரு தீவிரவாத அமைப்புக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வாழ்வதற்கும், சுதந்திரமான கருத்தை பின்பற்றவும், அதனை வெளிப்படுத்தவும், சுதந்திரமாக வாழ்வதற்கும் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் உறுதிப்படுத்தப்படவிருக்கின்றன. நாட்டு மக்கள் அனைவரினதும் ஜனாதிபதி என்ற ரீதியில் அவர்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். கொழும்பு சுதந்திரசதுக்க வளாகத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஜனநாயகத்தை சரியான முறையில் முன்னெடுப்பதற்காக சமநிலைபடுத்த வேண்டிய பல்வேறு துறைகள் காணப்படுகின்றன. நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கம், நீதித்தறை என்பனவற்றிற்கு இடையில் சமநிலை இருப்பது அவசியமாகும். பிரஜைகளுக்கு தனிப்பட்ட உரிமைகளை போன்று கூட்டு உரிமைகளும் காணப்படுகின்றன. பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், திருடர்கள், பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோர் போன்ற தரப்புக்களின் தாக்கங்கள் இருக்குமாயின், நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்க மாட்டாது. போதைப்பொருளில் இருந்து பிள்ளைகளை பாதுகாக்காவிட்டால், பெற்றோருக்கு சுதந்திரம் கிடையாது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களை வெளியிடும் போது, மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாதவாறு செயற்படுமாறும் அவர் கேட்டுக் கொண்டார். தூய்மையானதும், வினைத்திறன் வாய்ந்ததுமான அரச சேவை நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியமாகும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சபாநாயகர் கரு ஜயசூரிய உட்பட பலரும் இதில் கலந்து கொண்டார்கள்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11