பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடவுள்ளது

Share Button

பாராளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்குக் கூடவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூலமான கேள்விகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பதிலளிக்கவுள்ளார். மோட்டார் வாகன சட்டத்தின் கீழான உத்தரவுகள் தொடர்பில் இன்று விவாதிக்கப்படவுள்ளது.

இதேவேளை, பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்காக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர் விபரங்களை சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று வெளியிடவுள்ளார்.

பாராளுமன்றத்தின் தவணை முடிவடைகின்ற போது செயற்குழுவும் செல்லுபடியாகாமல் போகும்.

அதன்படி, புதிய செயற்குழுவிற்கான உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அரசியல் கட்சிகள் சபாநாயகருக்கு முன்னதாக அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-05 | 17:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931
புதிய நோயாளிகள் - 03
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48
நோயிலிருந்து தேறியோர் - 858
இறப்புக்கள் - 11