முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்

Share Button

ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் சிறை வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தம்மை பிணையில் விடுவிக்குமாறு ஹேமசிறி பெர்னாண்டோ தாக்கல் செய்திருந்த மீளாய்வு மனுவை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலக்கரட்ன அவரை பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

சந்தேகநபருக்கு பிணை வழங்குவதில் சட்டமா அதிபர் திணைக்களம் எந்தவித ஆட்சேபனைகளையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமியான ரொக்கப் பிணையிலும், 25 லட்சம் ரூபா பெறுமதியிலான இரண்டு சரீரப் பிணைகளிலும் இவர் விடுவிக்கப்பட்டார். வெளிநாடு செல்லவும் இவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலை தடுக்கத் தவறிய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்கள்.

இதேவேளை, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 12:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 122
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 104
புதிய நோயாளிகள் - 0
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2