அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கக் காங்கிரஸின் பிரதிநிதிகள் சபையில் உரையாற்றியுள்ளார்

Share Button

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கக் காங்கிரஸின் பிரதிநிதிகள் சபையில் உரையாற்றியுள்ளார். மேலும் நான்கு ஆண்டுகளுக்கு பதவிகளை தொடர எதிர்பார்ப்பதாக அவர் இதன் போது அறிவித்திருந்தார். அமெரிக்காவை வல்லமை பொருந்திய நாடாக மாற்றும் நடவடிக்கை வெற்றி அளித்திருப்பதாக அவர் இதன் போது தெரிவித்தார். அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நன்ஸி பெலோஸி ஆகியோரும் இதில் கலந்து கொண்டார்கள். அமெரிக்க ஜனாதிபதி உரையாற்றும் போது, அவரது உரை அடங்கிய பிரதியை சபாநாயகர் நன்ஸி பெலோஸி கிழித்தெறிந்ததை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று இடம்பெறவிருக்கும் நிலையில், அவரது உரை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *