மூன்று சர்வதேச சக்கர நாற்காலி போட்டிகள் இலங்கையில் நடைபெறுகின்றன.

Share Button

மூன்று சர்வதேச சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டிகளை இலங்கையில் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் முதலாவது போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பில் ஆரம்பமாகும். இரண்டாவது போட்டி எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இலங்கை டென்னிஸ் சங்க தலைமையகத்தில் இடம்பெறும். மூன்றாவது போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.ஸி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறும். கொரியா, மலேசியா, இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வீர-வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ளதாக இலங்கை சக்கர நாற்காலி டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *