19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கிண்ணப் போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

Share Button

காட்டுத் தீயினால் பெரிதும் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், நிதிதிரட்டும் கண்காட்சி போட்டி ஒன்று இன்று இடம்பெற்றது.

பொண்டிங் இளவன் மற்றும் கில்கிரிஸ்ட் இளவன் அணிகள் இதில் பங்குகொண்டன.

10 ஓவர்களை கொண்டதாக இடம்பெற்ற இந்த போட்டியில் முன்னாள் நட்சத்திர வீரர்கள் பலரும் பங்கேற்றனர்.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பொண்டிங் இளவன் நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 104 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கில்கிரிஸ்ட் இளவன் அணி 10 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 103 ஓட்டங்களைப் பெற்றது.

அதன்படி, இந்த போட்டியில் பொண்டிங் இளவன் அணி ஒரு ஓட்டத்தால் வெற்றிப்பெற்றது.

தென்னாபிரிக்காவில் இடம்பெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப்போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி பிற்பகல் 1.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

19வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கிண்ணத் தொடரை பொறுத்தவரையில் இந்திய அணி பல தடவை உலக கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.

பங்களாதேஷ் அணி இந்த முறையே இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.

இந்தமுறை இறுதிப் போட்டியில் இரண்டு ஆசிய அணிகள் பங்கேற்கின்றமை சிறப்பம்சமாகும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *