பல்கலைக்கழக கட்டமைப்பை சீர்குலைக்க எந்தவொரு தரப்புக்கும் இடமளிக்கப்பட மாட்டாதென உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவிப்பு

Share Button

தேசிய கல்வி கட்டமைப்பை சீர்குலைப்பதற்கும், பல்கலைக்கழகங்களை பலமிழக்கச் செய்வதற்கும் எந்தவொரு தரப்பினருக்கும் இடமளிக்கப் போவதில்லையென அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் சகல பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள், பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றவுள்ளதாக அமைச்சர் கூறினார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் தெரிவித்தார். தான் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டதில் இருந்து ஆராய்ந்த தகவல்களை இந்தக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *