பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தில் நாட்டிற்கு பல நன்மைகள

Share Button

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் மூலம் நாட்டுக்கு பல்வேறு வெற்றிகள் கிடைத்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு ஒத்துழைப்பும் வலுவடைந்துள்ளதோடு, கடற்றொழில், வீடமைப்பு, சமூக வசதிகள், சுற்றுலாத்துறை உட்பட பல்வேறு விடயங்கள் பற்றி இதன் போது ஆராயப்பட்டதாகவும் அவர் கூறினார். இலங்கை மக்களுக்காகவே கடன் தொகை மீளச் செலுத்தலை தாமதப்படுத்துமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசாங்கம் 486 பில்லியன் ரூபாவை திருப்பிச் செலுத்துவது அவசியமாகும். ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் இந்தத் தவணைக் கொடுப்பனவை இலகுவாக வழங்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியில் பிளவு ஏற்படுவதை தடுக்க முடியாதெனவும் அவர் கூறினார். கட்சியின் பொதுச் செயலாளருக்கே தொடர்ந்தும் அதிகாரம் காணப்படுகிறது. வேட்பு மனுக்களில் கையொப்பமிடும் அதிகாரமும் பொதுச் செயலாளரிடம் காணப்படுகிறது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட தகுதி வாய்ந்தவர்கள் பற்றி கவனம் செலுத்தி, அவர்களுக்கு சேவை நீடிப்பை வழங்குவது பற்றி ஆராய்வதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11