உயர்மட்ட ஊடக கலாசாரத்திற்கான பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரி ஒன்று அமைக்கப்படவுள்ளது

Share Button

சிறந்த ஊடகக் கலாசாரத்திற்காக ஊடகப் பரப்பை சரியான முறையில் பயன்படுத்துமாறு அமைச்சர் பந்துல குணவர்தன ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரச ஊடகங்களுக்கு சேறு பூசும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ, தனிப்பட்டவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவோ இடமளிக்கப்பட மாட்டாது. ஊடகவியலாளர்களுக்கு உயர்ந்த ஊடக கலாசாரத்தை ஏற்படுத்துவதற்காக பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரி ஒன்று ஆரம்பிக்கப்படவிருப்பதாக அமைச்சர் கூறினார்.

அரச – தனியார் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் கருத்து வெளியிட்டார். உயர்தரத்தில் சித்தியடைந்த சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழகத்திற்கான வாய்ப்பை வழங்க நடவபடிக்கை எடுக்கப்படும். உயர்தரத்தில் சித்தியடைந்த அனைவருக்கும் பல்கலைக்கழக வாய்ப்பை வழங்கும் சவாலை அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது.

பகிடிவதையினால் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறிய மாணவர்களுக்கு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கான வாய்ப்பை வழங்குவதற்கான சந்தர்ப்பம் பற்றியும் கண்டறியப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *