இலங்கை போக்குவரத்து சபையின் வருமானம் உயர்வு

Share Button

பஸ் டிப்போக்களில் நாளாந்த வருமானம் அதிகரித்துள்ளதாக இலங்கைப் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. போக்குவரத்து சபையின் கீழ் செயற்படும் 107 டிப்போக்களில் 12 டிப்போக்கள் தவிர ஏனைய டிப்போக்கள் கடந்த மாதத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நாளாந்த வருமானம் ஈட்டியுள்ளது. நஷ்டம் ஈட்டும் 12 டிப்போக்களையும், இலாமீட்டும் நிலைக்கு கொண்டுவருவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று கொழும்பு நாரேஹன்பிட்டியவில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான அலுவலகத்திற்குச் சென்று வேலலத்திட்டங்களை ஆராய்ந்தார். நஷ்டமீட்டும் நிறுவனமாக இருந்த இலங்கைப் போக்குவரத்துச்சபையை புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், இலாபம் ஈட்டும் நிலைக்கு கொண்டுவர முடிந்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். போக்குவரத்து சபையை அபிவிருத்தி செய்ய மேலும் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். தற்போது இலங்கை போக்குவரத்து சபையிடம்; ஏழாயிரம் பஸ்கள் உள்ளன. நாளாந்தம் 700 பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுவதில்லை. சாரதி மற்றும் நடத்துனர்களின் குறைபாடு இதற்கான காரணமாகுமென அவர் கூறினார். எனவே நிலவும் வெற்றிடங்களை விரைவில் நிரப்புமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11