தொழிலற்ற பட்டதாரிகளை தொழிலில் அமர்த்துவதற்கான விண்ணப்பப்படிவங்கள் எதிர்வரும் 20ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

Share Button

தொழிலற்ற பட்டதாரிகள் டிப்ளோமாதாரிகளை தொழில்வாய்ப்புக்களில் ஈடுபடுத்தும் வேலைத்திட்டத்திற்காக கோரப்பட்ட விண்ணப்பத்திகதி மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 20ம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

தொழிலற்ற பட்டதாரிகள் டிப்ளோமாதாரிகளை தொழில்வாய்ப்புக்களில் ஈடுபடுத்தும் வேலைத்திட்டத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்காக உழைக்கும் கலாசாரத்தை உருவாக்குவதற்காக நிலையான அபிவிருத்தி செயற்பாட்டை நோக்கி நம்பிக்கை மிக்க தர்க்க ரீதியான அடிப்படையில் இளம் சந்ததியினரை ஈடுபடுத்துவது இதன் நோக்கமாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சௌபாக்கியத்தின் தொலைநோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைய இந்த வேலைத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

தொழிலை எதிர்பார்ப்பவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படும் பட்டப்படிப்பை அல்லது டிப்ளோமா பாடநெறியை 2019ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அந்தத் தினத்தில் 35 வயதிற்கு மேற்படாதவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரி தான் விண்ணப்பிக்கும் பிரதேச செயலகப் பிரிவில் நிரந்தரமாக வதியக்கூடியவராகவும், கடந்த 3 வருடங்களுக்குள் தொழிலில் ஈடுபடாதவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பப்படிவத்தை முறையாக நிரப்பி பட்டப்படிப்பு சான்றிதழ் அல்லது டிப்ளோமா சான்றிதழுடன் பெறுபேற்று ஆவணத்தின் சான்றிதழ் பிரதியையும் இணைத்து இம்மாதம் 20ம் திகதிக்கு முன்னர் இலங்கை தபால் திணைக்களத்தின் ஸ்பீட் போஸ்ட் கூரியர் சேவை மூலமாக அனுப்ப வேண்டும். விண்ணப்பப்படிவங்களை தொழிலற்ற பட்டதாரிகள் அல்லது டிப்ளோமா தாரிகளை தொழிலில் ஈடுபடுத்தும் வேலைத்திட்டம் 2020, நிறுவன முகாமைத்துவ மற்றும் இணைப்புப் பிரிவு, ஜனாதிபதி செயலகம், காலி முகத்திடல், கொழும்பு 01 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கடிதத்தின் இடதுபக்க மேல் மூலையில் பட்டதாரி என்றால் பட்டதாரி மாவட்டத்தின் பெயர், என்பவற்றையும் டிப்ளோமா-தாரி என்றால் டிப்ளோமாதாரி மற்றும் மாவட்டத்தையும், குறிப்பிட வேண்டும்.

தெரிவு செய்யப்படுபவர்கள் கல்வி மற்றும் சுகாதார அமைச்சு, விவசாயம், கமநல சேவைகள், வனஜீவராசிகள், சுதேச ஆயுர்வேத, அளவீட்டு, நீர்ப்பாசன, சிறு ஏற்றுமதிப் பயிர், குடிவரவு குடியகல்வு உள்ளிட்ட பல அரச துறைகளில் தொழிலுக்காக இணைத்துக் கொள்ளப்படுவார்கள். ஒரு வருட கால பயிற்சிக்காலத்தில் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். மாவட்ட அடிப்படையில் நியமனம் வழங்கப்படும் அதேவேளை, நியமனம் கிடைக்கும் மாவட்டத்தில் 5 வருடங்கள் சேவையாற்றுவது கட்டாயமாகும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11