அரச வானொலியை உயர்தர மிக்க ஊடகமாக மாற்றியமைக்க அர்ப்பணிக்கவுள்ளதாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் ஜகத் விக்ரமசிங்க தெரிவிப்பு

Share Button

அரச வானொலியை உயர்தரமிக்க ஊடகமாக மாற்றுவதற்கு தான் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் ஜகத் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நிறுவனம் எய்த வேண்டிய இலக்கை எட்டுவதில் பிரதான கவனம் செலுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார். ஊழியர்களின் நலன்சார் விடயங்களில் மிகுந்த கவனம் செலுத்துவதாகவும் தலைவர் குறிப்பிட்டார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜகத் விக்ரமசிங்க இன்று காலை தமது கடமைகளை ஆரம்பித்தார். அதன்போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *