பொலிஸ் சேவையில் பதவி உயர்வு கிடைக்காதவர்களுக்கு விரைவில் பதவி உயர்வு.

Share Button

பொலிஸ் சேவையில் கீழ் நிலைகளில் பதவிகளில் சேவையாற்றி இதுவரை பதவி உயர்வு கிடைக்காதவர்களுக்கு பதவி உயர்வு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் கீழ் கடந்த ஆறு வருட காலப்பகுதியில் எந்தவித பதவி உயர்வும் கிடைக்காத கான்ஸ்டபிள்களுக்கும், சாஜன்டன்களுக்கும், பொலிஸ் பரிசோதகர்களுக்கும் பதவி உயர்வு வழங்கவுள்ளதாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.;

பாராளுமன்றத்தில் அண்மையில் முன் வைக்கப்பட்ட குறைநிரப்புப் பிரேரணை அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதி பெறப்படவுள்ளது. அதன் பின்னர் நிகழ்ச்சித் திட்டங்களுடன் தொடர்புடைய ஒப்பந்தக்காரர்களுக்கும், வழங்குனர்களுக்கும் எஞ்சிய நிதி வழங்கப்படுமென அமைச்சர் கூறினார்.

கலைஞர்களின் படைப்புகளுக்கு எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே இது தொடர்பில் உடன்பாட்டுக்கு வந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் வானொலிகளில் ஒலிபரப்பப்படும் ஒரு பாடலுக்கு 20 ரூபாவும், தொலைக்காட்சிகளில் ஒரு பாடலுக்கு 100 ரூபாவும் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டதாக

அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறினார்.

இதேவேளை, பொலிஸ் மா அதிபரும், சட்டமா அதிபரும் இரு அரச நிறுவனங்களின் பிரதானிகளாவர். ஆவர்களின் பிரச்சினைகளை நீதிமன்றத்தின் ஊடாக தீர்த்துக் கொள்ள வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டார். எனவே குறித்த விவகாரத்தில் அரசு தலையிடாதென அவர் சுட்டிக்காட்டினார்.

ஊழியர் சேமலாப நிதித்திற்கு பங்களிப்பு வழங்கும் ஊழியர்களுக்கு அவர்களது கணக்கில் மாதாந்தம் சேரும் தொகை தொடர்பிலான தொலைபேசி ஊடாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன இதன்போது தெரிவித்தார். இரண்டு தசம் 6 மில்லியன் மக்கள தற்போது; ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பு வழங்குவதாக அவர் கூறினார். ஒவவொரு வருடத்திலும் டிசம்பர் மாதத்திலும், ஜனவரி மாதத்திலும் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவது வழமை. இதனை தவிர்ப்பதற்கு பெரும்போகத்தில் 25 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லை களஞ்சியப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை கைத்தொழில் கிராமங்களில் எட்டு தொழில் துறைகளை ஆரம்பிக்க 726 மில்லியன் ரூபா ஒதுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் பத்திரன ரமேஷ் கூறினார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலுடன் சுற்றுலாத்துறை பின்னடைவை சந்தித்துள்ளது. அதனை வழமைக்கு கொண்டுவரும் நோக்கில் சுற்றுலா விசா வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணம் 48 நாடுகளுக்கு அறவிடப்படுவதில்லை. இதனை இன்னும் மூன்று மாத காலப்பகுதிக்கு அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது அமைச்சர் கூறினார்.

ஓய்வூதிய முரண்பாட்டைத் தீர்க்க குழு.

ஓய்வு பெற்றவர்கின்; ஓய்வூதியத்தை அதிகரிக்கும விடயத்தில் உள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளார் எஸ்.ஹெட்டி ஆராய்ச்சி தெரிவித்துள்ளார். இந்த குழு ஊடாக குறித்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டின் பின்னர் ஓய்வு பெற்றவர்களில் ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால்; 2011 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வூ பெற்றவர்கள்; பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இரு தரப்பினருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் இந்த விவகாரத்தை தீர்த்துக் கொள்ள குழு நடவடிக்கை எடுக்குமென அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11