அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு நாளை முதல் சாட்சி விசாரணைகளை ஆரம்பிக்கின்றது

Share Button

அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு கிடைக்கப் பெற்ற முறைபாடுகள் தொடர்பிலான விசாரணைகள் நாளை ஆரம்பமாகவுள்ளது.

2015ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 29ஆம் திகதி வரை இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் தொடர்பில் இந்தக் குழு ஆராயவுள்ளது.

ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரட்னவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழு தமது அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளது.

அதன்படி, இந்த ஆணைக்குழுவிற்கு எதிர்வரும் 20ஆம் திகதி வரை முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும்.

கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவின் ஊடாக சாட்சியங்கள் தற்போது பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

முன்னாள் கடற்படை அதிகாரி உள்ளிட்ட பலர் தமது முறைப்பாடுகளை ஆணைக்குழுவிடம் முன்வைத்துள்ளனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *